நினைவகம்

நினைவகம்

தற்காலிக நினைவகம் சார்பிலாத் தெரிவு நினைவகம்
கணினியின் நினைவகம்
தற்காலிக நினைவகம்
  • DRAM, e.g. DDR SDRAM
  • SRAM>
  • Upcoming
    • Z-RAM
    • TTRAM
  • Historical
    • Williams tube
    • Delay line memory
நிரந்தர நினைவகம்
  • ROM
    • PROM
    • EAROM
    • EPROM
    • EEPROM
  • Flash memory
  • Upcoming
    • FeRAM
    • MRAM
    • CBRAM
    • PRAM
    • SONOS>
    • RRAM
    • Racetrack memory
    • NRAM
  • Historical
    • Drum memory
    • Magnetic core memory
    • Plated wire memory
    • Bubble memory
    • Twistor memory

சார்பிலாத் தெரிவு நினைவகம் (குறுஞ்சொல் RAM) கணினி நினைவக வகையாகும். அது ஒருங்கிணைச் சுற்று(integrated circuits) ஒன்றின் வடிவத்தில் அமைவதுடன் சேமிக்கப்படும் தரவுகள் எந்த ஒழுங்கிலும் பெற்த்தக்கவகையில் அமையும். சார்பிலாத் தெரிவு என்பது தரவுகள் சேமிக்கப் பட்ட ஒழுங்கு தவிர்ந்த வேறு சார்பிலாத் ஒழுங்குகளிலும் தரவுகள் தெரியப்படலாம் என்பது ஆகும்.

சார்பிலாத் தெரிவு நினைவகம் காந்த நாடா, காந்த வட்டு மற்றும் ஒளியியல் வட்டு போன்ற நினைவக முறைகளில் இருந்து வேறுபடுகிறது. இந்த இதர முறைகளில் வாசிப்பு கருவிகளின் பௌதிக அசைவு மூலமே தரவுகள் வாசிக்கப்படும். இதனால் இவற்றில் வாசிப்பு நேரத்தைவிட தரவு உள்ள இடத்தை அடைவு நேரமே(seek time) அதிகமாகும்.

RAM எனும் சொற்பதம் பெரும்பாலும் தற்காலிக நினைவகத்துடனேயே தொடர்புபடுத்தப்படுகிறது. இவற்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சேமிக்கப்பட்ட தரவுகள் இழக்கப்படுவிடும். எனினும், வேறு வகையான நினைவகங்களும் RAM ஆகும், அதாவது நிலை நினைவகம்(ROM) போன்றனவும் சார்பிலாத் தெரிவு நினைவகம் என்றே வகைப்படுத்தப்படும். ஏனெனில் சார்பிலாத் தெரிவு என்பது வாசிப்பு முறை மட்டுமே.

வரலாறு

முதலாவது சார்பிலாத் தெரிவு வகை நினைவகம் 1951 இல் உருவாக்கப்பட்ட காந்த உள்ளக நினைவகம் (magnetic core memory) ஆகும், இது பின் 1960கள் மற்றும் முன் 1970களில் ஒருங்கிணைச் சுற்று நினைவகம் உருவாக்கப்படும் வரை அனைத்து கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. காந்த உள்ளக நினைவகம் உருவாக்கத்திற்கு முன்னர் கணினிகளில் நினைவக செயற்பாடுகளுக்கு அஞ்சல் சுற்று (relay) அல்லது வெற்றிட குழாய் (vacuum tube) பயன்படுத்தப்பட்டது.

0 Responses

Post a Comment

abcs